கலப்படம்
தேனீ சேர்த்துவைத்த தேனில் கலப்படம் ஏதுமில்லை
மனிதன் அதில் நீரும் வெல்லமும் சேர்த்து
கலப்படத் தேனாக அதை மாற்றுகிறான்
தூய எண்ணமில்லை கலப்படம் மனதில்
தோன்றி உருவெடுக்கிறது கலப்படத் தேனாய்
ஆகும் சக்தியை மனிதனுக்கு அளித்து
ஆண்டவன் சுதந்திரமும் மனிதருக்கு தந்திட
தீயவைப் படைக்கின்றான் மனிதன் தனது
அழிவைத்த தேடியே அல்லவா