பூங்கோதை காத்திருந்தாள்

விவரம் தெரிந்த வயது முதல் பூங்கோதைக்கு கோயிலைத் தவிர பெரிய புகலிடம் இல்லை. கோவிலில் வேலை செய்வது கோவிலுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பது கோவிலில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது என்று அவளது வாழ்க்கை சென்று கொண்டிருந்தது.

பள்ளியும் பெற்றோரின் பாசமோ அறியாத பூங்கோதைக்கு கோயிலின் கருவறையே வீடாகும் அதில் இருக்கும் இறைவனை அவளது பெற்றோர் ஆவர்.

பூங்கோதைக்கு எந்த ஒரு ஆசையும் கிடையாது அவள் மிகவும் எளிமையானவள் அந்த கோவிலில் ஒரு யானை இருந்தது. அந்த யானையின் பெயர் கல்யாணி. பூங்கோதைக்கு கல்யாணி மீது மிகப்பெரிய அன்பு.

தான் சாப்பிட்டாலும் சாப்பிட விட்டாலும் கல்யாணி எப்படி இருக்கிறாள் என்று விசாரிப்பது அவளுடைய இயல்பு.

கோயில் திருவிழாவின் பொழுது கல்யாணிக்கு அழகாக அலங்காரம் செய்வது உணவு கொடுப்பது அதனுடன் நேரத்தை செலவழிப்பது வாழ்க்கை அழகாக சென்று கொண்டிருந்தது.

ஒரு நாள் பூங்கோதைக்கு மிகவும் உடல் நலம் சரியில்லாமல் போனது இதை அறிந்த அந்தக் கோயிலில் இருக்கும் குருக்கள் அவளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். மருத்துவமனைக்கு சென்றபின் அவளுக்கு இருப்பது சாதாரண காய்ச்சல் அல்ல அது ஒரு தீவிரமான நோய் என்றும் அந்த நோய் மரணத்தைக் கூட விளைவிக்கும் என்று மருத்துவர் குருக்களிடம் தெரிவித்தார்.இதை குருக்கள் பூங்ககோதையிடம் மறைத்து விட்டார் ஆனால் பூங்கோதை கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலம் குன்றி வருவதை அனைவரும் உணர்ந்தனர் .

இப்படி இருக்கையில் கல்யாணிக்கு பூங்கோதையிடம் மாற்றத்தை உணர முடிந்தது.

கல்யாணி உணவு உண்பதை மறுத்தது மற்றும் பூங்கோதை எண்ணி எண்ணி தனது கண்களில் நீரை கசிந்தது.

அன்று இரவே பூங்கோதை இறந்து போனால். நாட்கள் செல்ல செல்ல கல்யாணிக்கு உணவும் செல்லவில்லை மனமும் செல்லவில்லை.

அன்று இரவே பூங்கோதை இறந்து போனால். நாட்கள் செல்ல செல்ல கல்யாணிக்கு உணவும் செல்லவில்லை மனமும் செல்லவில்லை.

கல்யாணியிடம் பாகன் மாற்றத்தை உணர்ந்தான். இப்படியே சென்றால் கல்யாணிக்கு உடல் நலம் குன்றிவிடும் என்பதை உணர்ந்த பாகன் அவளை எப்படியாவது வற்புறுத்தி உணவு உண்ண செய்தான். ஆனால் கல்யாணி உணவை உட்கொள்ளவே இல்லை.

சரியாக பூங்கோதை இறந்து பத்து நாள் ஆனது. அவள் எங்கே இருந்து கிடந்தாளோ அதே இடத்தில் கல்யாணி மடிந்து கிடந்தால்.

பூங்கோதை இருக்கும் இடத்திற்கு கல்யாணி சென்றாள். பூங்கோதை காத்திருந்தாள்.

எழுதியவர் : வெங்கடேஷ் சிவராமன் (28-Dec-23, 3:40 pm)
சேர்த்தது : Venkatesh
பார்வை : 95

மேலே