வில்-லு எங்கே
'வில்'லு எங்கே?
@@@@@@
ஏன்டா தம்பி நாங்கள் என்ன வேட்டையாடரவங்களா? வேட்டைக்காரங்களைத் தேடிக் கண்டுபிடிச்சு கேளடா.
@@@@@@
அண்ணே உங்கள் வீட்டில் இருக்கும் 'வில்'லைக் கேட்டேன்.
@@@@@@
எங்க வீட்டில் ஏதுடா தம்பி 'வில்'லு?
@@@@@@
நீங்க பெற்ற 'வில்'லு.
@@@@@@
ஏன்டா நீ சித்தப்பா பையனா இருந்துட்டு என்னையே நீ கிண்டல் பண்னற மாதிரி பேசறே . உனக்கே நல்லா இருக்குதா இது மாதிரி பேச?
@@####
உண்மையைத்தான் அண்ணே நான் கேட்டேன்.
@@#@@@
என்னடா சொல்லற?
@@@@@@@
உங்க பையன் பேரு 'தனுஷ்'.
@@@@#@
ஆமாம். அதுக்கு என்ன?
@@@@@
'தனுஷ்'க்கு பொருள் (அர்த்தம்) தெரியுமா?
@#######@
அடே தொண்ணூறு சதவீதத்துக்கு அதிகமான தமிழர்கள் அவுங்க பிள்ளைகளுக்கு இந்திப் பேருங்களைத்தான் வைக்கிறாங்க. அவுங்க எல்லாம் இந்திப் பெயர்களின் பொருள் தெரிஞ்சா அந்தப் பேருங்களை அவுங்க பிள்ளைகளுக்கு வைக்கிறாங்க. தமிழ்ப் பேரை பிள்ளைகளுக்கு வச்சா யாரும் மதிக்கிறதில்லை. அதனால இந்திப் பேருங்கள வைக்கிறாங்க. நானும் அதுமாதிரி தான் என் பையனுக்கு 'தனுஷ்'னு பேரு வச்சேன்.
@@@@@@@
அண்ணே 'தனுஷ்' ஒரு நடிகர் பிரபலமானதுக்கு அப்பறம் தான் அந்தப் பேரே தமிழர்களுக்குத் தெரிய வந்தது. இன்னும் யாருக்கும் அந்தப் பேருக்கான பொருள் தெரியாது. சோதிடத்தில் வர்ற அந்தப் பேரைத்தான் தெரியும். பொருள் தெரியாது.
@@#@@@
'தனுஷ்'க்கு என்னடா தம்பி பொருள்?
@@@@@@@
'தனுஷ்'ன்னா 'வில்'னு பொருள்.
@@@@@@@
ஐயோ, என் மகன் பேரு 'வில்'லா? இது மகத்துவங்களுக்குத் தெரிஞ்சா என்ன ஆகும். எல்லாம் அவனை ',வில்'லு, 'வில்'லுனு கூப்புடுவாங்களே நான் என்ன செய்வேன்.
@@@@@
இராசியான பேரு அண்ணே. இவனும் நடிகர் 'தனுஷ்' மாதிரி பிரபலமான நடிகராக ஆவானு பெருமைப்படுங்க அண்ணே.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Danush = Bow. Sanskrit name.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
தமிழ்ப் பெயர்கள் தமிழரின் அடையாளம்