கண்ணில் எழுதுவது காதல் கவிதையோ

கண்ணில் எழுதுவது காதல் கவிதையோ
கண்ணையும் மிஞ்சுமோ புன்னகை யின்கவிதை
வண்ணமிகு வானவில் வானில் குறிப்பெடுத்து
எண்ணமெல்லாம் அந்த எழில்

------ஒருவிகற்ப இன்னிசை வெண்பா மோனைப் பொலிவுடன்

கண்ணிலினில் எழுதுவது காதலெழில் கவிதையையோ
கண்ணிணையும் மிஞ்சிடுமோ புன்னகையின் மென்கவிதை
வண்ணமிகு வானவில்லும் வானத்தில் குறிப்பெடுத்து
எண்ணமெல்லாம் தூவிற்று எழில்மிகுஅக் கவிதைதன்னை

-----கூவிளங்காய் காய் காய் காய் கலி விருத்தம்

கண்ணிலினில் எழுதுவது காதலெழில் கவிதையையோ
கண்ணிணையும் மிஞ்சிடுமோ புன்னகையின் எழில்கவிதை
வண்ணமிகு எழில்வானவில் வானத்தில் குறிப்பெடுத்து
எண்ணமெல்லாம் தூவிற்று எழில்மிகுஅக் கவிதைதன்னை

-----கலித்தளை மிகுந்து தரவு கொச்சகக் கலிப்பா ஆனது
கலித்தளையுடன் வெண்டளையும் வஞ்சித் தளையும் விரவி வந்ததால்
இது பிரிந்திசை துள்ளல் ஓசை உடைய தரவு கொச்சகக் கலிப்பா

எழுதியவர் : கவின் சாரலன் (28-Dec-23, 7:07 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 92

மேலே