எங்களிடமே திருப்பிக் கொடு
பகை யுள்ளம் கொண்டோரும்
பசியோடு வந்து விட்டால்
படையலோடு ஓர் உணவு
பரிமாறி ரசித்திடுவார்
முன்பின் தெரி யாதவரும்
மூச்சிரைக்க வந்துவிட்டால்
முழு மனதாய் ஓர்உதவி
முடியும் வரை செய்திடுவார்
வைகை ஒடும் மதுரையிலே
வந்துவிட்டான் தலைவனென்று
வசந்தத்திலே பூத்த மலர்
வாடி இன்று நிற்கிறதே
என்ன தவம் செய்தோமோ
எம் மண்ணில் பிறந்துவிட்டார்
என்ற மக்கள் நெஞ்சங்களோ
எச்சில் விழுங்க மறுக்கிறதே
இப்படியோர் வள்ளல் உங்கள்
விண்ணுலகில் இல்லை என்று
ஆண்டவன் நீ நினைத்துவிட்டாய்
அங்கு ஏனோ அழைத்துவிட்டாய்
உலக மக்கள் ஆயுளிலே
உம் தேவை எடுத்துகொண்டு
எம் மன்னன் ஆயுள் கூட்டி
எங்களிடமே திருப்பி கொடு- நீ
எங்களிடமே திருப்பிக்கொடு