குலோத்துங்க சோழன் கோவை - நூல் - இரண்டாவது - இயற்கைப் புணர்ச்சி

அருணாசலக் கவிராயர் எழுதிய குலோத்துங்க சோழன் கோவை
நூல்.
இரண்டாவது - இயற்கைப் புணர்ச்சி.

அஃதாவது-தெய்வத்தானாவது தலைவியானாவது கூடுதல்; அவற்றுளிது தலைவியாற் கூடுதலென்க.

அது: வேட்கையுணர்த்தல், மறுத்தல், உடன்படல், கூட்டமென நான்கு வகைப்படும்;

அந்நான்கும்- இரந்த பின்னிற்றற் கெண்ணல் முதலிய பதினைந்தும் பிறவுமாகிய விரிகளையுடையன; அவை வருமாறு

முன்னிலை யாக்கல்.

மெய்தொட்டுப் பயிறல்.

பொய் பாராட்டல் (9, 10)

இடம்பெற்றுத் தழால்.

(இ-ள்) தலைவன் தலைவியைத் தழுவுதற்கு வாய்த்த இடத்தைக் கண்டு கூறுதல்.

கட்டளைக் கலித்துறை

அத்தாரு நேருங் குலோத்துங்க சோழ னளகைவெற்பி
லெத்தா லினிமெலி வாய்மன மேயெழு பாரு(ம்)விற்கு
முத்தார் வனமுலை யார்கண்ணி லேயுண்டு மொய்கருணை
கொத்தார் வனமுலை யார்கண்ணி லேயுண்டு கூடி*டுமே! 11 .

எழுதியவர் : அருணாசலக் கவிராயர் (30-Dec-23, 8:19 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 10

மேலே