புத்தாண்டு திண்டாட்டம்
புத்தாண்டு திண்டாட்டம்
🎂🎂🎂🎂🎂🎂🎂🧁🧁🧁🧁🍧🍧🍧🍧
கமுக்கம் (மறைத்து) காட்டி குடித்த மதுக்கள்
உதிக்க போகுது நட்டநடு ரோட்டில்
கந்து (நெருப்பு) பறக்க வண்டி ஓடும்
நொந்து மக்கள் மிரண்டு ஓட
பணவம் (தம்பட்டம்) அடித்து பட்டாசு வெடித்து
பரவசம் கொள்வர் நள்ளிரவு நேரம்
தெழித்தல்(ஆரவாரித்தல்) நடத்தி தெளித்தல் நடக்கும்
நுரையைக் கக்கும் மதுவகை பானம்
மின்விளக்கு ஒளிர்ந்து கண்விழித்து இருந்து
விடங்கம்(அழகு) என்பர் இருள் அடங்கும் வரைக்கும்
ரொட்டியை வெட்டி முகத்தினில் பூசி
பிறப்பில் பெருமை சுதம் (ஞானம்) கண்ட மக்கள்
மேழகம் (கவசம்) நாட்டில் பால் பட்டுப் போச்சு
அவரவர் வாழ்க்கை அவரவர் கையில்
பயந்தோர் (பெற்றோர்) நாளும் பிள்ளைகளை எண்ணி
பயந்தோர் ஆகவே வாழ்தல் கேடு
நுணங்கியோர் (நுணுகிய அறிவுடையோர்) உண்மையில் நுட்பம் காட்டுவர்
கடந்திட்ட ஆண்டின் நடந்திட்டல் ஆய்வர்
வேலியாய் இருந்து வெற்றியாய் கடந்து
சூழி(உச்சி) யாய் நிறையும் இந்நாளே சிறப்பு அனந்தல்(உறக்கம்) கொள்ளுங்கள் அன்றாட இரவாய்
தினங்கள் என்பது தினம் தினம் பிறக்கும்
பிணக்கு ஒன்றும் பிறப்பினில் இல்லை
உணக்கம் (வாட்டம்) இங்கு ஒருவர்க்கும் நேரா.....
🥂🥂🥂🥃🥃🍷🍷🍷🍸🍸🍺🍺🍻🍹🍹🍹🍹