வைகறை நோக்கி,,,

வைகறை நோக்கி...,,,

என்னுயிர்த் தோழனே
உன்
துயரத்தை கொள்ளையடிக்க
துணிந்தவர் யாருமில்லை

நீ
சோகத்தில்
சுகம் கன்னடத்து போதும்
இனி சுகத்தில்
புது யுகம் காணலாம் வா!

தடியை மழித்துவிட்டு
வாடிய முகத்தை மாற்றி
நாடியில் முறுக்கேற்றி
ஓடிவா என்னுடன்

வரும் வழியில்தான்
வைகையாறு உள்ளது
உன்
துயர மூட்டைகளை
தூக்கியெறிந்துவிட்டு
புதிய மனிதனாக
புறப்பட்டு வா

துயரம் பிரிய மறுக்கிறதா
பரவாயில்லை
துயரக்குழந்தையை
தொட்டிலிட்டு தூங்க வைக்க
உன்னால் முடியாது
தூக்கிக்கொண்டே வா
ஆனந்த திருவிழாவில் தொலைத்து
அனாதையாக்கிடுவோம்

இனி
சிரிக்கும்போதுகூட
சித்தம் மயங்கி
கண்களை மூடிவிடாதே
கல்லறை கட்டிவிடுவார்கள்
கயவர்கள்

தூங்கும்போது
குறட்டைவிடுவது நல்லது
அது
அவ்வப்போது
உன் உயிரிப்பதை
உணர்த்திக்கொண்டேயிருக்கும்

இல்லையென்றால் உன்னைச்சுற்றி
ஒரு கூட்டம்
ஒப்பாரிவைக்க ஆரம்பித்துவிடும்

ஆனால் நீயழும்போதுதான்
ஆறுதல் சொல்லக்கூட
ஆட்கள் இருக்காது

இந்த
சோதனைகளையெல்லாம் பார்த்து
சோர்ந்து நின்றுவிடாதே
சின்னப்பறவைகளெல்லாம்
உன்னை
சிலையென எண்ணி
எச்சமிட்டு செல்லும்
தலையில்!
எதற்கும்
எச்சரிக்கையாயிரு!

சோதனைகள் வரும்போது
அதை உனக்குள்
அனுமதிக்காதே
உன்னைநீயே
சோதனைப்போட்டுக்கொள்

இனி
வைகறை நோக்கி
நம் பயணம் ...,
பார்த்துவா!
தடைக்கற்கள் நிறைய
உன்னை
தடுமாற வைக்கும்
தடம் மாறவும் வைக்கும்
மாறிவிடாதே
நீ தடம்மாறி போனால்
வைகறை
வழிமாறிப்போகலாம்

வா...,
வைகறை நோக்கி
நம் பயணம்...,!
-- வெ.பசுபதி ரங்கன்

எழுதியவர் : -- வெ.பசுபதி ரங்கன் (8-Jan-24, 7:38 pm)
சேர்த்தது : vpasupathi rengan
பார்வை : 108

மேலே