என்னவளும் நிலவும்

இன்பத்தில் ஆனந்தம் கண்டவள் துன்பத்தில் வீழ்ந்திடவில்லை
இன்பம்போல் துன்பமும் ஒரு அனுபவம்தான்
என்று கலங்காதிருக்கின்றாள் ஒரு துறவிபோல
இதுவே நான் என்னவளில் கண்ட பேரழகு
நான் கவிஞனாய் பெரிதும் ரசிக்கும் மதியும் இவள்போலவே
முழுவதிலும் நிலவில் அழகு, நிலவு தெளும்பாது;
தேய்ந்தாலும் அந்த கீற்று நிலவிலும் நிலவு அழகே
முழுவதானாலும் தேய்ந்தாலும் நிலவு சிணுங்காது
தண்ணொளி பரப்பி கொண்டே இருக்கும்
அதனால்தானோ பரமசிவனும் பிறை நிலவை
தனது சிரசில் தாங்கி இருக்கிறானோ ?

என்னவளும் நிலவொத்த அழகுடையாள் இதனால்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (19-Jan-24, 7:32 pm)
Tanglish : ennavalum nilavum
பார்வை : 184

மேலே