இராமன் அழகில் தடுமாறிய கம்பன்
வெய்யோன் ஒளி தன் மேனியின் விரி சோதியின் மறைய
பொய்யோ எனும் இடையாளோடும் இளையானோடும் போனான்
மையோ மரகதமோ மறி கடலோ மழை முகிலோ
ஐயோ இவன் வடிவென்பது ஓர் அழியா அழகுடையான்
-----------------------------------------------------------------------------------------------------
வெய்யோன் ஒளி = சூரியனின் ஒளி
தன் மேனியின் = இராமனின் மேனியில் இருந்து வரும்
விரி சோதியின் மறைய = விரிகின்ற ஜோதியில் மறைய (விரி சோதி - வினைத்தொகை)
பொய்யோ எனும் இடையாளோடும் = சீதைக்கு இடுப்பு ஒன்று இருக்கிறதா இல்லையா... அது பொய்யா நிஜமா என்று தோன்றும் அளவுக்கு உள்ள இடையாளோடும்
இளையானோடும் போனான் = இளைய பெருமாளான லக்ஷ்மணன் உடன் போனான்
மையோ = அவன் நிறம் மை போன்ற கருமையோ ?
மரகதமோ = மரகத மணி போன்ற பச்சை நிறமோ?
மறி கடலோ = கடல் போல நீலமோ ?
மழை முகிலோ = மழை மேகம் போல் கருப்போ?
ஐயோ = ஐயோ எப்படி சொல்லுவது?
இவன் வடிவென்பது = இவன் வடிவழகு என்பது
ஓர் அழியா அழகுடையான் = எப்போதும் அழியாத அழகு உடையவன்
!.......