நன்மதி வெண்பா - நூல் - பாடல் 19
எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா
இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்
நூல்
நேரிசை வெண்பா
ஏரிநிறை நீரா லெழிலுறுங்கா லத்தடத்தில்
ஆருந் தவளை யயுதமாம் - தாரணியில்
பொற்றிரளான் மேன்மை பொருந்துங்கா னன்மதியே
பற்றுடையே மென்பார் பலர்! 19