கனவு
*******
கனவுகள் கண்ணின் கவிதைகள் நெஞ்சில்
வனப்பினை வார்க்குமதை வாழ்த்து
*
வாழ்த்தும் கனவுகள் வாழ்வை இனிமையில்
ஆழ்த்தி மகிழ்விக்கும் ஆம்
*
ஆமிக் கனவுகள் ஆற்ற லுருவாக்கும்
சேமித்து வைத்துச் சிரி
*
சிரிப்பில்லா வாழ்வைச் செழிப்பாக்க வேண்டிக்
கரிசனத் தோடஃதைக் காண்
*
காண்பவை யாவும் கனவல்ல உள்ளுணர்வைத்
தூண்டுங் கனவுவரத் தூங்கு
*
தூங்குவாரை அன்றாடம் தொட்டெழுப்பித் தோள்கொடுக்க
ஏங்கும் கனவாய் இரு
*
இருக்கும் கனவுகளை இல்லாதாக் காதே
நெருப்பாய்க் கனக்க நினை
*
நினைவுகளில் நின்று நிலைத்திடும் வண்ணக்
கனவுகளை மெய்படுத்திக் காட்டு
*
காட்டு மரங்களில் காணும் கருணைபோல்
நாட்டு வளக்கனவை நாடு
*
நாடு செழிக்கவும் நாளை சிறக்கவும்
கோடிட்டுக் காண்நீ கனவு
*
மெய்யன் நடராஜ்