உணர்வாய்

*************
வாழ வகையற்று வாழ்ந்து மடிவதிலும்
சூழுமிருள் போக்கிச் சுடர்விடு - கீழுளார்
மேலெழல் கேவல மாகா. கரமொடு
காலெலா முன்வெற்றிக் காயுதமே - ஆலெலாம்
ஆளலா மாகவே ஆல்விதை போலெழுந்தே
நாளெலாம் நீபடர் நல்விழுது - தோளெடு
வீரத் தழும்பின்றி வெற்றிப் பதக்கம்கை
சேரவழி யேது; செயல்புரி - ஈரவிழி
இன்னு முனக்கெதற்கு ஏழ்மை நிலைவிடுத்து
மின்னும் வழிசமைத்து மேலோங்கு - உன்னுள்
உனக்கே அறியாத உண்மை தனையே
மனதா லுணர்வாய் மகிழ்ந்து
(பஃறொடை வெண்பா)

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (2-Feb-24, 2:06 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 179

மேலே