தெருவில் அலையும் மனித ஒநாய்க்கள்எச்சரிக்கை

தெருநாய்க் கூட தெருமுனை வரைத்தான்
குறைத்துக் கொண்டே வரும் துரத்தும்
எல்லை முடிந்தததும் திரும்பிப் போய்விடும்...

இதோ பசுத்தோல் போர்த்தி அலையும்
மனித ஒநாய்க்கள்.....
சலனமிலா சாலைகளில் அப்பாவிப் பெண்களைக்
குறிவைத்து பின்தொடர்கிறார்களே....
அருவெறுப்பே....

அந்தோ பரிதாபம்.....இன்று அந்த மனித ஓநாய்
அவள் தனக்கு கிடைக்க மாட்டாள் என்று அறிந்து
அவளைத் தீர்த்துக் கட்டியதாய் அறிந்தேன்
பாவம் அப்பாவிப் பெண்.....அவள் செய்த பாவம் என்ன
அழகாயிப் பிறந்ததா ....சுத்தந்திரமாய் பாதையில்
செல்ல நினைத்ததா ?

நோப்பம் விடும் மனித ஒநாய்க்களை
யார் சுவடில்லாது அழிப்பார் ?
யார் பதில் தருவார்....

கணக்கில்லா குற்றங்கள் தினமும்
நடந்துக்க கொண்டே இருக்க
குற்றம் வராது தடுத்து நிறுத்த வழி....jQuery17105603837844353332_1708943041664???

மக்கள் விழுப்புணர்ச்சி....

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (26-Feb-24, 3:00 pm)
பார்வை : 51

சிறந்த கவிதைகள்

மேலே