கிளியும் புலியானது

🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜

*கிளியும் புலியானது..*


படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜

"வேடன்"
வலை விரித்த
காலம் போய்.....
"மான்"களும்
வலை விரிக்கும்
காலம் வந்துவிட்டது...

அன்று
"முட்கள்" தான்
காயப்படுத்தியது..
இன்று
காயப்படுத்துகிறது
"மலர்"களும்....

மீனைப் பிடிக்க
தூண்டில் போடுவார்கள்....
இப்போதெல்லாம்
"மீன்களே !"
துள்ளி வந்து
தூண்டில் மாட்டிக்கொள்கிறது...

"புலிகள்" தான்
அசைவ உணவை
விரும்பி உண்ணும்....
இன்று....
"கிளிகளும்"
அசைவும் விரும்பி
உண்ணுகிறது......

*கவிதை ரசிகன்*


🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅

*வயதைக் கட்டாயமாக்குவோம்...*

குழந்தை பிறக்க
குறிப்பிட்ட
நாட்கள் இருக்கு....

காது குத்த
குறிப்பிட்ட
வாரம் இருக்கு.....

நடப்பதற்கு
குறிப்பிட்ட
மாதம் இருக்கு......

பள்ளியில் சேர்ப்பதற்கு
குறிப்பிட்ட
ஆண்டு இருக்கு.....

கல்லூரியில் சேர்வதற்கு
குறிப்பிட்ட
தகுதி இருக்கு......

கல்யாணம் செய்வதற்கு
குறிப்பிட்ட
வயது இருக்கு......

ஆனால்

காதல் செய்வதற்கு
மட்டும்தான்
இந்த உலகத்தில்
எதுவும் இல்லை.....

*கவிதை ரசிகன் குமரேசன்*

🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜

எழுதியவர் : கவிதை ரசிகன் குமரேசன் (26-Feb-24, 8:43 pm)
பார்வை : 67

மேலே