நீதிவெண்பா - கடவுள் வாழ்த்து

நீதிவெண்பா [1] தமிழ் நீதி நூல். வெண்பாக்களால் ஆன இந்நூலின் ஆசிரியர் யாரெனத் தெரியவில்லை. இந்நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல்:

இருவிகற்ப நேரிசை வெண்பா

மூதுணர்ந்தோர் ஓதுசில மூதுரையைப் பேதையேன்
நீதிவெண்பா வாக நிகழ்ந்துவேன் - ஆதிபரன்
வாமான் கருணை மணிஉதரம் பூத்தமுதல்
கோமான் பெருங்கருணை கொண்டு!

கடவுள் வாழ்த்துப்பாடலைத் தவிர்த்து இதில் மொத்தம் 100 பாக்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலும் ஒரு நீதியைச் சொல்கிறது.

இதன் காலம் 12 ஆம் நூற்றாண்டு

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Mar-24, 7:28 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 103

மேலே