கூட்டணியில் சேருதல்
அண்ணே நமது திருந்திய ரவுடிகள் கூட்டமைப்பில் இருபதாயிரம் ரவுடிகள் உறுப்பினர்களாக இருக்கிறாங்க.
@@@@@
அதுக்கென்னடா முட்டையடி மோகன்?
@@@@@
சில கட்சிகளோட கூட்டணியில் ஒரு சின்னச் சின்னக கட்சிகள் தான் சேர்ந்திருக்கிறாங்க. அவுங்க நிறையக் கட்சிகளை எதிர்பார்த்து காத்துக் கிடக்கிறாங்க. மூடரகம் போனா நமக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். நம்ம உறுப்பினர்கள் ஒவ்வொரு தொகுதியிலும் இருக்கிறாங்க. நீங்க கறாராப் பேசி நம்ம கட்சியை அந்தக் கட்சியோடு இணைச்சுட்டா நாம் கேக்கற தொகுதிகளைக் தருவாங்க.
#@@@@####
ஆமாண்டா முட்டை. நல்ல யோசனை. கெட்ட வார்த்தைகளைப் பேசிவதில் நம்ம உறுப்பினர்கள் கைதேர்ந்தவர்கள். நாம் நாடறிஞ்ச திருந்திய ரவுடிகள். நம்ம பேருங்களைக் கேட்டாலே போதும். சனங்க கொத்துக் கொத்தா நமக்கு வாக்களிப்பாங்க. நாம் அப்பிடியே அந்தக் காட்சியைக் கைப்பற்றிடலாம். நான் மாநிலத் தலைவர் ஆகறதுக்கு இது வழி காட்டும்.
@@@@@@@@
மற்ற திருந்திய ரவுடிகள்::
தலைவர் குண்டாந்தலை குருவரன் வாழ்க.
@@@@@@
போதும் நிறுத்துங்கடா. நாம் அந்தக் கட்சியைக் கைப்பற்றி நான் அந்தக் கட்சியின் தலைவர் ஆனதுக்கப்பறம் பாராட்டு விழா நடத்தி வாழ்த்துங்கடா.