எழுதாத வலி எழுத்தில்

எழுதாத
வலிகள்
ஏராளம்
என்னுள்......ஒளிந்து
இருந்தாலும்
விழி
தரும்
விழிநீரும்
வேதனையின்
உச்சமும்.....வெளியுலக அச்சமும்
என்னை
என்
கண்ணை
மூடிக்கொண்டு
உலகம்
இருட்டு என்று
திருட்டு மொழி பேச
வைக்கிறது.......

இங்கே
வசை
பாட
வரிசையில்
ஆயிரம் பேர்
உண்டு..... வாழ்த்துச்சொல்ல
சிதறிய
சில்லறைகளாய்
ஒருசிலரே
உண்டு.....!!

எல்லோரும்
மாண்டுவிடுவோம்
என்று
தெரிந்தும்
அசராத
கூட்டம்
இலாப
நஷ்டம் பார்க்குது
மூச்சுக்காற்றில்......!!

விண்ணுக்கு
ராக்கெட்
ஏவும்
உலகில்......
இன்னொரு
உடம்பில்
பில்லி சூனியம்
ஏவுவது
என்று
ஊரை
ஊமை ஆக்குகிறது......!!!

இங்கே
அல்ல
எங்கேயும்
உலகம்
சுற்றும்...... அதை
வேடிக்கை
பார்க்காமல்
வேண்டாத
வேலை
பார்த்தால்......!!!!!!!!!!

எழுதியவர் : தம்பு (16-Mar-24, 9:11 pm)
சேர்த்தது : தம்பு
பார்வை : 124

மேலே