சற்று கேட்டுச் செல்லடா கண்ணா

தேர்தல் காற்று வீசத் துவங்கி விட்டது
பொய்மழை பொழியும் பூமியில்

வாய்ப்பந்தல் போடுபவன் வரிந்து கட்டி வருவான்
சொரிந்து கொண்டு நிற்காதே சனநாயகா

வாடகை வாயன் எல்லாம் மேடையில் சூளுரைப்பான்
வாய்மை சாலைகளில் சிரிக்கும்

நடுநிலை பத்திரிகைத்துவம் போய் ஜால்ரா ஜர்னலிசம் பெருகிவிட்டதடா
ஜனநாயக வீதியில் தோழா

தொலைகாட்சி பெட்டியிலும் உன் குழாய் நெடுகிலும் ஜிங்சா ஜிங்சா சத்தம்
ஓங்கி ஒலிக்குதடா வாக்காளா

பஞ்சாப சிந்து குஜராட்ட மராட்டா திராவிட உத்கல வங்கா
விந்த்ய ஹிமாச்சல யமுனா கங்கா
ஜல்தி ஜல்தி ஏனடா சற்று கேட்டுச் செல்லடா கண்ணா !

எழுதியவர் : கவின் சாரலன் (27-Mar-24, 10:29 am)
பார்வை : 42

மேலே