மங்களம் தருவாள்

மங்களம் தருவாள்
×××××××××××××××××
மங்கையர் வணங்கிட
மனம்மது உருகியே
மங்களம் தருவாள்
மதுரை மீனட்சியே

சிங்கம் சுமக்கும்
சிறந்தக் கருவறை
மங்கா மீன்விழி
மயக்கும் மீனட்சியே

குங்குமம் நிலைத்திடும்
கும்பிட்டு வந்திடவே
சங்கடம் தீரும்
சன்னதி செல்லவே

திங்கள் வழிபடத்
திறம்படும் இல்லறம்
பொங்கிடும் செல்வமும்
பொங்கும் கடலாக

தங்கை யவள்
தமயன் அழகர்
தாயம் நமக்கு
தருவாள் யாவுமே

எங்கும் நிறைந்தவள்
எந்நாளும் காப்பவள்
எங்களை கைவிடா
எல்லை தெய்வமே

சமத்துவ புறா. ஞான. அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (30-Mar-24, 8:40 am)
சேர்த்தது : பாக்யராஜ்
Tanglish : mangalam tharuvaal
பார்வை : 80

மேலே