ராசாவே உன்னை விட மாட்டேன்

ராசாவே உன்னை விட மாட்டேன்
×××××××××××××××××××××××××××××××× பாடலின் மெட்டில்

ராசத்தி உன்னை மறக்க மாட்டேன்
மண்ணில் புதைந்தாலும் முகம் மறக்கமாட்டேன்

ராசாத்தி உன்னை...

ஓடுகாலிகள் என்னை விட்டு
ஓடிய போதிலும் நீ
ஒருத்தியே மனம் வைத்தாய்
நீதான் என் வாழ்வென்று

ராசாத்தி உன்னை.....

குப்பை மனதை சுத்தம்
செய்தே உனக்கென்று இதயத்தில்
இடம் வைத்தேன்

ஊரார் சொல்ல கேளாது
உள்ளம் தைத்து என்னையே
திருமணமும் செய்தாய்

சாமி எனக்கேதம்மா
ஒரு அருளும் செய்யவே
தேவி நீதான் தெய்வமம்மா
தஞ்சம் தந்தாய் மனதிலே
வாழ்வும் எனக்கு தந்தாய்
நீயம்மா..ஹோ..ஹோ..ஹோ

ராசாத்தி உன்னை....

பட்ட மரமாக
கலையிழந்த நின்ன போதிலே
நீயும் வந்து சேரவே
வசந்தம் ஆனதே..

ராசாத்தி உன்னை..

சமத்துவ புறா. ஞான. அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (30-Mar-24, 8:33 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 32

மேலே