அலை அலையாய் காதல் சுகந்தம்
அலை அலையாய் காதல் சுகந்தம்
××××××××××××××××××××××××××××××
கலை கலையாய்
கன்னிச் சிலையே/
வலை வலையாய்
விழியசை வளைக்குமே/
அலை அலையாய்
காதல் சுகந்தம்/
மழை மழையாய்
பாசங்களை தருதே/
தினம் தினம்
நிழலாக வருவேன்/
நாளை நாளையென
சம்மதிக்க மறுப்பாய் /
சொல் சொல்லென
கெஞ்சிப் பார்க்கிறேன்/
செல் செல்லென
கொஞ்சியே விரட்டுகிறாய்/
பழகப் பழக
பாலாய் இனிக்கும்
பருகப் பருக
வருவாய் தேனாக/
சமத்துவ புறா. ஞான. அ.பாக்யராஜ்