சகித்தல்

**********
ஓடிப் போகின்றவர்களுக்
ஒத்திகை பாராமல்
கதாநாயகன் கதாநாயகியாய்
நடித்து இம்சைப்பட வேண்டிய
தொல்லை இல்லை
*
மாமன் குடும்பத்தோடும்
அத்தை குடும்பத்தோடும்
அயலவர் குடும்பத்தோடும்
நண்பர்கள் குழுவுடனும்
தனித்தனியே நின்று
தாளம் போட வேண்டியதில்லை
*
பழைய காதலன் / காதலி
வந்து நின்றால்
மன நெருடல் கொள்ளத் தேவை இல்லை.
*
அரிதாரம் கலைந்து விட்டதா
ஆடை விலகிவிட்டதா
ஆபரணம் உதிர்ந்துவிட்டதா
என்று ஒவ்வொன்றாய்
பார்க்க வேண்டிய அவசியம் இல்லை
*
வராத புன்னகையை வரவழைக்க
அதிகம் சிரமம்
எடுத்துக் கொள்வதும்
மொக்கை ஜோக்குகளுக்கும்
சிரிக்க வேண்டிய அவலமும் இல்லை
*
திருமண மேடையில்
மணமக்களுக்குத்தான்
ஒப்புக்கு ஒத்துப்போய்
சகிக்க வேண்டியிருக்கு
கல்யாண படப்பிடிப்பாளர்கள் முன்
*

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (30-Mar-24, 2:32 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 22

மேலே