அடியெதுகை பொழிப்பு மோனைக் கவிதை
அடியெதுகை பொழிப்பு மோனைக் கவிதை
×××××××××××××××××××××××××××××××
விளைந்திடும் நிலத்தை விற்பவர் விளங்கிடார்/
விளைவுகள் வருகையில் விழித்திடுவர் உழவரே/
இளையோர் உழுதல் இனிதெனக் கற்றிட/
கிளையாக வளரும் கிராமத்து விவசாயமே/
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்