உலகப் பொய்யறிதல் அமைப்பு பரிசு

21 வயது இளைஞர் ஒரு கட்சியின்

தலைமை அலுவலகம் செல்கிறார். அங்கு

தலைமை நிலையச் செயலாளர்:

தம்பி நீங்க யாரு? உங்களுக்கு என்ன

வேண்டும்?

@@####

வணக்கம் ஐயா. நான் இளங்கலை

பட்டதாரி. சின்ன வயது முதலே பொய்

பேசும் போட்டிகளில் முதல் பரிசு

பெற்றவன். கடந்த மாதம் உலகப்

பொய்யறிதல் அமைப்பு நடத்திய

அனைத்து உலகப் பொய்யறிதல்

போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு

பெற்றுள்ளேன். இந்தச் சான்றிதழைப்

பாருங்கள். (தலைமை நிலையச்

செயலாளர் அந்தச் சான்றிதழை வாங்கிப் பார்க்கிறார்)

@@@@@
தம்பி நீ உலக சாதனை படைத்தது பற்றி

பெருமைப்படுகிறேன். எனது

பாராட்டுக்கள். நீ சரியான இடத்துக்குத்

தான் வந்திருக்கிறாய். எங்கள் கட்சியின்

மிக முக்கியமான கொள்கைகளில் ஒன்று

மக்களை முட்டாள்கள் ஆக்கி அவர்கள்

நம்பும்படியான சொற்களைப் பேசுதல்.

அதைத் திரும்பப் பேசி மக்களை மூளைச்

சலவை செய்ய வேண்டும். இதில் நாங்கள்

பலமுறை வெற்றி கண்டுள்ளோம்.
@@@##@
மிக்க நன்றி ஐயா. எனக்கு......

@@####

உனக்கு என்ன தேவை என்று எனக்குத்

தெரியும். நீ அனைத்துலக பரிசு பெற்ற

நபர். உன் கல்வித் தகுதியைப் பற்றி

விளக்கமாகச் சொல்.

@@######

ஐயா நான் முதல் வகுப்பில் இருந்தே

நன்றாகப் படிக்கும் மாணவர்களின்

விடைத்தாள்களைப் பார்த்து எழுதியே

பள்ளியிறுதி வகுப்பை முடித்தேன்.

கல்லூரியில் வரலாறு பாடத்தில்

சேர்ந்தேன். வகுப்பில் நன்றாக கவனித்து

குறிப்பெடுத்து தேர்வு எழுதும் போது

வேண்டுமென்றே தவறான பெயர்கள்,

ஆண்டுகள், இடங்கள் பற்றி எழுதி

வைப்பேன். என் கையெழுத்து கோழி

கிறுக்கியது போல இருக்கும்.

வினாக்களையே திரும்பத் திரும்ப எழுதி

விடைத்தாள் பக்கங்களை நிரப்புவேன்.

நான் எழுதும் ஒவ்வொரு தாளிலும்

அறுபது பக்கங்களுக்குக் குறையாமல்

விடை எழுதி வைப்பேன்.

விடைத்தாள்களைத் திருத்தி மதிப்பீடு

செய்யும் பேராசிரியர்கள் எனது

கையெழுத்துப் புரியாததால் எனக்கு

குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் ஆன

40ஐ அளித்துவிடுவார்கள். சில

தாள்களுக்கு 60% கூட கிடைத்திருக்கிறது.

ஒரு வேளை எனது விடைத்தாளின்

எடையைப் பார்த்து 60% த்தை அள்ளிப்‌


போட்டார்களோ என்னவோ?
@@@@@##

தம்பி நீ சாதனை‌ மன்னன். உனக்கு எங்கள்

கட்சியின் முதன்மைச் செய்தித்

தொடர்பாளர்

என்ற பதவியை‌ அளிக்க‌ எங்கள் கட்சியின்

தலைவருக்கு பரிந்துரை செய்கிறேன்‌.

நாளை காலை பத்து மணிக்கு வா.

தலைவர் உனக்கு பதவிப்பிரமாணம்

செய்து வைப்பார். அதன்பிறகு நீ

'பேராசிரியர் புரட்சிப் புயல்' என்ற புனை

பெயருடன் தொலைக்காட்சி

விவாதங்களில் கலந்து கொள்ளலாம்.

உனக்கு வேண்டிய எல்லா வசதிகளையும்

செய்து கொடுப்போம். ஒரு நிகழ்ச்சிக்கு

உனக்கு ஐம்பதாயிரம் ரூபாய் ஊதியம்

வழங்கப்படும். நீ பேசும் பொய்கள் மற்றும்

எந்த அளவுக்கு மற்ற செய்தித்

தொடர்பாளர்களைப் பேசவிடாமல்

இடையூறு செய்கிறாய் என்பதைப்

பொறுத்து சிறப்பு ஊதியம் வழங்கப்படும்.

போதுமா?

@@@@@@@

ஐயா, ஐயா, வேலை வெட்டி இல்லாமல்

கிடந்த எனக்கு இந்தப் பதவியை

வழங்கியதற்கு கோடி நன்றிகள்.

@@@@@@@

தம்பி, 'பேராசிரியர் புரட்சிப் புயல்' நாங்கள்

தகுதி அறிந்து கட்சிப் பதவியை

வழங்குகிறோம். சென்று வா. உன்னை

அழைத்துவர உன் வீட்டுக்கு சரியாக

ஒன்பது மணிக்கு காரை அனுப்பி

வைக்கிறேன்‌

@@@@
மிக்க நன்றி ஐயா.
***************************************************
(முற்றிலும் கற்பனை)

எழுதியவர் : மலர் (7-Apr-24, 4:23 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 50

மேலே