கண்கள் தொடுக்கும் காதல் பாகம் -12

கண்கள் தொடுக்கும் காதல்: பாகம் -12

மளிகை பொருட்கள், அரிசி, காய்கறிகள், பழங்கள், chicken, முட்டைகள் மற்றும் பால் யென அனைத்தும் வாங்கி விழா நடக்கும் வைஷ்ணவி மண்டபத்திற்கு கொண்டு வந்து சேர்த்தான்.

கடைசி அரிசி மூட்டையை தூக்கும் போது,என் வீட்டில் கூட இப்படி மூடை தூக்கி வேலை செய்தது கிடையாது "கூலி இல்லாத வேலையாள் போல் பயண் படுத்திக் கொண்டார்களே" என்று ஆதங்கம் ஒருபுறம் , " டே நீ கோடிஸ்வரனுக்கு மருமகன் ஆகனும்னா சும்மாவா? சகிச்சுக்கனும் " மறுபுறம் நினைக்க , சட்டை காலரை தூக்கி நான் கோடிஸ்வரன் மருமகன் சொல்லப் போரன்கிற சந்தோஷம் அதிகமாக இருக்கு..

மண்டபத்தின் சமையல் கூடத்தில் இருந்த சமையல் கலைஞர்களிடம் வேலையை தொடங்குங்கள்.. ஏதும் தேவையெனில் சொல்லுங்கள் வாங்கித் தாரேன் என்றான் கெளதம்..

சமையலக்காரர் ஒருவரிடம் ஐயா எந்த ஊர் என்றான் கெளதம்.அதற்கு அவர் மேலக்கலங்கல் என்றார்,அவனோ அப்படியா அந்த ஊர் எங்கே இருக்கு? , அதற்கு பெரியவர் என்ன தம்பி சிட்டிசன் பட அத்துப்பட்டியை கேட்கிற மாறி கேட்கிறீங்க?,உங்கள் கதையை எழுதுற எழுத்தாளர் பிறந்த ஊரே அதுதான்.. என்றார்..

இந்த வட்டத்திலலே நல்ல கேட்டரிங்  நிறுவனம் எங்க MT அபிஷேக் கேட்டரிங் , மேலக்கலங்கல்தான்.என்றார் சமையல் , ஆமாம் நானும் கேள்வி பட்டேன் சமையல் வெற லெவல்ல இருக்கும்னு ஆனா..இன்னைக்குத்தான் உங்க சமையலை சாப்பிடப் போறேன் என்றான் கெளதம் ..எங்களை உங்க கல்யாணத்துக்கும்  கூப்பிடுங்க தம்பி என்றார் சமையல்காரர்.. அதற்கு கெளதம்.. எப்படி ....என் கல்யாணத்திற்கு அப்படின்னா நீங்கள் சொர்க்கம் வரனும் பரவாயில்லையா.. என்றான்..

சமையல் அமைதியானது..

டவேரா ஓட்டுநர் தம்பி வாங்க ஓனர் கூப்பிட்டாங்க என்றவுடன் கிளம்பி திரிஷாவின் வீட்டுக்கு வந்தனர்..

வீடு விழாக்கோலம் பூண்டது,வண்ண விளக்குகள் வீடு முழுவதும் பரப்பி ஜொலி ஜொலிக்க தாஜ்மஹால் போன்று பிரமிப்பாக இருந்தது.. ஒலிபெருக்கியில் "காதல் வைபோகமே" என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது..

திரிஷா கேரளத்து  பட்டு சேலை கட்டி அரை கிலோ தங்கத்தை கழுத்தில் அணிந்து.. கையெல்லாம் மருதாணி வளைந்து ஓடும் நதியாக பதிந்திருக்க.. சீயக்காய் வாசம் கூந்தலின் செயற்கையான வாசம் காற்றில் மிதந்து மூக்கை பழுதாக்கி இதயத்தை நிறுத்திட .. கெளதம் அவனாக இல்லை..

திரிஷா ஒரு தாம்பாளத்தில் மஞ்சள் தடவிய கருப்பு நிற ஃபார்மல் பேண்டுடன் நீல நிறச் சட்டையை வைத்து கெளதமிடம் கொடுக்க.. இதெல்லாம் வேண்டாம் திரிஷா என்றான் கெளதம்..

திரிஷா அம்மா... என்று சத்தமிட அபிராமி வந்தவள் என்னடி? என்றாள்.. கெளதம் புதுத் துணி வேண்டாம்னு சொல்றான்.. என்றாள் திரிஷா..

என் பிள்ளைகளில் ஒன்றாகத்தான் உன்னையும் பார்க்கிறேன்.. ஆண்பிள்ளை இல்லைங்கிற குமுறல் உன்னை பார்த்த பின்னர்தான் ஆறுதல்..எங்களுக்கும் ஒரு மகன் இருக்கான்ங்கிற மகிழ்ச்சியை அடைந்தோம்.. அம்மா சொல்றேன் துணியை வாங்கிக்கோ என்றாள்..

கெளதம் துணியை வாங்கி அவனது அறைக்கு சென்று தொட்டு பார்த்து மிருதுவனதாக இருக்க..விலை என்ன ? என்று பார்க்க OTTO shirt Rs : 1495 /- என்றும் Raymond pants Rs : 3490 /- என்றும் இருந்தது இவ்வளவு விலை உயர்ந்த துணியை அவன் பார்த்தது கூட கிடையாது..இதைக் கண்டு அவன் மகிழ்ச்சி அடையவில்லை.. கவலையில் ஆழ்ந்தான்..

காரணம் திரிஷாவின் அம்மா அபிராமி அவனை என் மகன் என்று சென்டிமென்ட்டாக பேசியது தான்..இது அவனது காதல் சதுரங்கத்நிற்கு அபிராமி வைத்த‌ காதல் ராஜாவுக்கு செக் மேட் ..

ராஜா காய் நகர்ந்து சதுரங்க ஆட்டம் தொடருமா..?

..... தொடரும்

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்
மேலக்கலங்கல்
தென்காசி மாவட்டம்

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (7-Apr-24, 6:36 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 24

மேலே