நாடு அதை நாடு
நாடு அதை நாடு
விளை நிலங்களை விலைப் பேசி/
வயிற்றுக்குச் சோறிட்ட விவசாயம் அழித்து/
வாகனப் புகையை காற்றில் கலந்து/
ஆற்று நீரில் கழிவுகளைக் கொட்டி/
ஆரோக்கியம் கெடுத்து நோயினைத் தரும்/
சாதிய பேதங்களில் ஏற்படும் பகையற்ற/
சமதான வாழ்வுக்கு வழி வகுத்து/
உழவுத் தொழில் காத்து பசியில்லா/
மாசற்ற சுகாதாரத்துடன் மக்களை நோயின்றி/
காத்திடும் அரசு கொண்டதே நாடாகும்/
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்