இதய ஓசை நீ
இதய ஓசை நீ
~~~~~~~~~~
கண்ணின் இமைகள் துடிப்பில் இசைத்திடும்/
கருவிழி மெளன மொழி பாடி/
இதய மேடையில் காதல் கீதம்/
இதய ஓசையாக நீ மலர்ந்திடு/
குருதியில் கலந்திட்ட உன் சுவாசக்/
காற்று புல்லாங்குழலாக இதயத்தை இசைத்திடும்/
துடிப்பறியும் கருவியில் இதயத்தை சோதிக்க/
துடிப்பும் உன் பெயர் சொல்லும்/
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்