விருச்சிகராசியில் ஈஸ்வரன் கிபி 2000 பாகம் 4
விருச்சிகராசியில் ஈஸ்வரன் கிபி 2000: பாகம் 4
++++++++++++++++++++++++++
ஜாதகத்தில் 4 க்கு உரிய
கிரகம் வலிமை பெறாத நிலையிலே
மூணாறு போன சனி
மூன்று மாதம் பின்பு
புகுந்த வீடு வர
பற்றுதல் பற்றிட பகையின்றியே வாழ்ந்திட
காக்கா கூட்டம் பேச்சைக் கேட்டு
கத்தியே சண்டையிட முயன்றிட
காக்கா வலிப்பும் வந்தது மூதேவிக்கு
காலிரண்டும் கையிரண்டும் வெட்டியே இழுத்திட
கட்டியவளுக்கு இழுக்கிறதுனு
கவலையில் உருகியவன்டி நான்
கவிதாளுக்கு இழுக்குதுனு
கவிதை பாட மறந்தவனடி நான்..
ஆஸ்பத்திரி கட்டிலில் படுத்த
அவலம் கண்டு அலறி துடித்தேனேடி
குளுக்கோஸ் தண்ணீ ஏறிடவே
குலம் போச்சுனு அழதேனேடி
காக்கா வலிப்பு நீங்கனுமுனு
கடவுளுக்கு நேர்த்திக் கடன் வைத்தேனேடி
கோதையிலே வலிப்பு குறையவில்லைனு
போத்திராஷ் கொண்டு போகையிலே
பொக்கிஷம் தொலைத்தவனைப் போல்
வெதும்பி வெதும்பி உடைந்தேனேடி
வயிற்றுப்பசியோடு ஆஸ்ப்பத்ரி
வாசல் படியில் கண்நோகக் காத்திருந்து
வற்றல் போல் காய்ந்தேனேடி..
சீரழிந்தனே இப்படியெல்லாம்
சிருக்கி உன்னால
இத்தனையும் மறந்தாயடி
பச்சைத் தாலி அறுத்தாயடி..
பாவியாக வெட்கம் கெட்டே நடந்துகிட்ட..
ஈஸ்வரன் விளையாட்டு தொடரும்...
சமத்துவ புறா. ஞான. அ.பாக்யராஜ்