மழையே வா மறு வாழ்வு தா
மழையே வா மறு வாழ்வு தா
மழையின்றி வறண்ட
மண்ணும் பாறையாச்சு /
வானம் பார்க்கும்
விவசாயிக் குடிகளை /
கை கொடுக்க
கர வேட்டிகளுடன் /
கார்மேகமே நீயும்
கை விரித்தால் /
பசித் தீர்க்கும்
பாட்டாளியின் நிலையறிவாய் /
மழையே வா
மறுவாழ்வுத் தா /
பிழைப்புக்கு வழியின்றி
போராடியே வாழ்கிறோம்/
வாங்கியக் பயிர்கடன்
வட்டியும் குட்டிபோட்டு /
வாட்டி வதைத்திட
வாழ வழியின்றி /
பூச்சிக்கொல்லி மருந்தருந்தி
புழுவாக மடிகிறோம் /
யாதும் ஊரே யாவரும் கேளிர்
சமத்துவ புறா. ஞான. அ.பாக்யராஜ்