உணவு பாதுகாப்பு தின கவிதை
*கவிதை ரசிகன்* எழுதிய....
*உணவு பாதுகாப்பு*
*தின கவிதை*
வாழ்வதற்காக
உணவு உண்ட
காலம் போய்....
உண்பதற்காக
வாழ்கின்ற
காலம் வந்துவிட்டது....
உணவில்
சுவை
இருப்பதெல்லாம்
நல்லதுதான்.....
ஆனால்
சுவையான
உணவு எல்லாமே!
நல்லதல்ல.....
பாஸ்ட் புட் உணவு
பணத்தை மட்டுமல்ல
நம் ஆயுள் நாட்களையும்
மிச்சப்படுத்துகிறது.....!
மாரடைப்பை உண்டாகும்
பரோட்டாவின் சுவையை
அறிந்த அளவிற்கு ..
மகா ஆயுளைத் தரும்
பழையச் சோற்றின்
அருமையை
அறிந்திருக்கவில்லை... அறிந்திருந்தாலும்
அள்ளிச் சாப்பிட
கௌரவம் விடவில்லை....!
"பாதுகாப்பான
உணவை
உட்கொள்ளுங்கள்" என்று சொன்னதை
நாம் தப்பாக
புரிந்து கொண்டோமோ ?
அதனால்தான்
"அட்டைபெட்டியிலும்
பாலித்தீன் பாக்கெட்டிலும்
அடைத்த உணவுகளை" சாப்பிடுகிறோமோ?
"பாதுகாப்பான உணவு"
உடலுக்கு
எந்த விளைவுகளையும்
தீங்கையும் ஏற்படுத்தாதே.!!!
நாம்
சுவைக்கு
அடிமையானதிலிருந்து
நோயை சுமக்க
வேண்டியதாயிற்று.... .!
நம் முன்னோர்கள்
ஒவ்வொரு வேளையும்
விருந்து சாப்பிட்டனர்...
ஆனால்
நாமோ!
மருந்து சாப்பிடுகிறோம்..
உணவு உண்டபின்
நம் தாத்தா பாட்டி
'வெற்றிலைப்' போட்டார்கள் ....
நம் அம்மா அப்பாவோ
'மாத்திரை' போடுகின்றனர்....
இன்னும்
பல மனிதர்கள்
'நடமாடும்
மெடிக்கல் கடை யாகவே! '
அலைகின்றனர்....!
உணவு என்பது
நம்மை பொருத்தவரை
பசியைத் தீர்க்கும்
ஒரு திடப்பொருள்...
அல்லது
ஒரு திரவப் பொருள்
அவ்வளவுதான்......
உடல் ஒரு கோவில்
உயிர் ஒரு தெய்வம்
என்றால்.....
அந்த தெய்வத்திற்கு
"அபிஷேகம்
செய்யும் பொருள்" தான்
"உணவு" என்பதை
நாம்
ஒருநாளும்
மறந்துவிடக் கூடாது....!!!
உணவே!
ஆயுளை தீர்மானிக்கிறது..
உணவே!
ஆனந்தத்தை தீர்மானிக்கிறது ..
உணவே!
சுகத்தை தீர்மானிக்கிறது..
உணவே!
ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது...
உணவே!
எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது ..
உணவே!
மனநிலையை தீர்மானிக்கிறது...
உணவே!
குணத்தைத் தீர்மானிக்கிறது
உணவே! வாழ்க்கையை
தீர்மானிக்கிறது......
நூறுசதவீதம்
பாதுகாப்பான உணவு என்பது
இவ்வுலகில் இல்லை
"தாய்ப்பாலைத் " தவிர ...
நமக்கு தெரியாமல்
கலப்படம் செய்யப்பட்ட
செயற்கை உரம் இடப்பட்ட
கெமிக்கல் தெளிக்கப்பட்ட விஷப்பொருட்களே!
தெருக்கடை எங்கும்
விற்கப்படுகிறது.....!
அப்படியிருக்கும் போது....
விஷம் என்றே! தெரிந்த
உணவு பொருட்களை
சாப்பிடலாமா....?
இருரம் கூப்பி
எமனைக் கூப்பிடலாமா?
இனியவது....
சுவையறிந்து சாப்பிடாமல்
சுகமறிந்து சாப்பிடுவோம்..!
நோய் நொடி இல்லாமல்
நூறு ஆண்டு வாழ்ந்திடுவோம்...!
படைப்பு
*கவிதை ரசிகன்*
நன்றி!