அம்மி இங்க வாடா

அம்மி இங்க வாடா
@@@@@@@@@@
"ஒரு வீட்டில் யாரோ அம்மி இங்க வாடா"னு

கூப்படறாங்க.அந்த வீட்டின் அருகே சென்று

கொண்டிருந்த பணி நிறைவு பெற்ற

தமிழாசிரியர் வியப்புடன் நிற்கிறார்.

'அம்மி' பெண்பால் பெயர் போல

இருக்கிறது. "வாடா" என்று

கூப்பிடுகிறார்களே. இந்த இரகசியத்தைக்

கண்டறிய விரும்பிய தமிழாசிரியர் அந்த

வீட்டின் அழைப்பு மணியை அழுத்துகிறார்.

ஒரு பெரியவர் வந்து "வாங்க

தமிழாசிரியர் ஐயா. நீங்க காலைல எங்க

வீட்டுக்கு வந்தது மிக்க மகிழ்ச்சி".

@@@@@@@
வணக்கம் ஐயா. இங்க யாரோ ஒருவர்

"அம்மி இங்க வாடா" என்று யாரையோ

அழைத்தார்கள். அந்த 'அம்மி'

ஆண்பிள்ளையா பெண்பிள்ளையானு

தெரிஞ்சக்கத்தான் வழில போயிட்டிருந்த

நான் உங்கள் வீட்டுக்கு வந்தேன் ஐயா.

@@@####

தமிழாசிரியர் ஐயா, நம்ம தமிழ் மக்கள்

யாரும் குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெயரை

வைப்பதில்லை. இந்திப்

பேருங்களைத்தான் வைக்கறாங்க.


நாங்கள் என் பேரனுக்கு

இந்தியர்களும் ஆங்கிலேயர்களும்

வைக்கும் 'அம்மி'ங்கிற பேரை

வைத்துள்ளோம். இந்தப் பேரைப் பெண்

பிள்ளைகளுக்கும் வைக்கலாம். ஆண்

குழந்தைகளுக்கும் வைக்கலாமுங்க.‌

@@@@@@

பரவாயில்லைங்க. வித்தியாசமான பேரா

உங்கள் பேரனுக்கு வச்சிருக்கறீங்க.

வாழ்த்துக்கள். வருகிறேன் ஐயா.

@@@@@################@@@@@@@@@


Ammy = God has hearkened, Palm 🌴 tree.
Unisex name. Indian, English origin.

எழுதியவர் : மலர் (13-Jun-24, 9:13 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 36

மேலே