நல்லதோ கெட்டதோ

நல்லதோ, கெட்டதோ எதிர்பாராத நேரத்தில் நடக்கும் கேயென்னார்
அமெரிக்காவில் குளிர்காலம் தொடங்கியது.எங்கும் பனி படர்ந்து நகரமே வெள்ளை மேகத்தால்
அலங்கரித்தது போல காட்சியளித்தது.நியூயார்க் நகரத்தில் மக்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள
உடம்பை மூன்று அடுக்குள்ள துணிகளால் மூடியவாறு சாலைகளில் செல்ல கால்களில் பனியை
தாங்கவல்ல பூட் அணிந்து மெல்ல மெல்ல வாத்து நடை பயின்றனர். யாரையும் அதிசயிக்க வைக்கும்
நகரம் நியூயார்க் எல்லா விதமான மக்களையும் அங்கு காண முடியும். அமெரிக்காவிலேயே முதல்நிலை
வகிக்கும் பணக்காரர்களை யும் மேம்பாலத்தின் கீழே போற்றிக்கொள்ள கூட கம்பளி இல்லாமல்
குளிரில் நடுங்கும் மக்களையும் இதன் நடுவில் உள்ளவர்களையும் காண வியப்பு வரும்,படைத்தவன்
மீது சிறிய கோபமும் உண்டாகும். எங்கு நோக்கினும் வானைத் தொடும் வகையான கட்டிடங்கள்
அதன் இடைவெளிகளில் கந்தல் துணிகளை உடுத்தி தங்கள் உயிரையும் உடலையும் வளர்ப்பதற்காக
சிறிதும் அஞ்சாமல் கவலை கொள்ளாமல் சிறிதும் பெரிதுமாக திருடி அதில் பிடிக்கப்பட்டால் சிறையில்
சென்று மூன்று மாதங்களை கட்டடத்தின் உள்ளே குளிர் தெரியாமல் கழித்துவிட்டு வெளியே வருவது
ஒரு விளையாட்டு போல இந்த மக்கள் நடத்தி வந்தனர்.
அவ்வழி செல்லும் மக்களும் இவர்களை பார்த்து பயம் கொண்டு அந்த இடத்தை எவ்வளவு விரைவில்
முடியுமோ அவ்வளவு விரைவாக கார்களை ஓட்டி செல்வர். சில தலைவர்கள் இவர்களது
வாழ்க்கையை சரி செய்து நியூயார்க் நகரத்தை சுத்தம் செய்கிறோம் என்று பலமுறை இவர்களை
வேறு இடத்திற்கு மாற்றி வாழ வழி அமைத்து கொடுத்தாலும் இவர்கள் யாவரும் தங்கள் தனி
சுதந்திரம் போனது என்று மீண்டும் இந்த வாழ்க்கைக்கே வந்து விடுவார்கள்.
நியூயார்க் நகரத்தை சுத்தம் செய்கிறோம் என்று பலமுறை முயன்றும் அது நடக்கவில்லை,நகரில்
இன்னமும் நாம் இந்த குடியிருப்புகளை காணலாம்.சிக்னல்களில் தட்டு ஏந்துவதும் ரயிலில் பிச்சை
மற்றும் வீடுகளின் வெளியே வைக்கும் பழைய பொருள்களை வண்டி வந்து எடுப்பதற்கு முன் எடுத்து
செல்வதும் இவர்கள் செய்யும் தொழில்.பல நேரங்களில் இவர்கள் வாழும் வாழ்க்கை பார்ப்பதற்கு
நமது மனதில் இரக்க உணர்ச்சியை ஏற்படுத்தினாலும் அவர்கள் நம் அருகில் வந்து நம்மை பணம்
கேட்பதில் ஒரு அதிகார தோரணை இருக்கிறது என்பதை உணரலாம். நாம் கையில் இருக்கும்
சில்லறையை அவர்களிடம் கொடுக்க அவர்கள் அதை எடுத்துக்கொண்டு செல்லும் பொழுது ஒரு
அலட்சிய பாவனை இருக்கும்.நம்மிடமும் மற்ற பயணிகளிடமும் பெற்ற பணத்தை கொண்டு அவர்கள்
தங்கள் வாழ்க்கையை நடத்தும் விதம் சிறிது கலக்கத்தை நமக்கு கொடுக்கும். இந்த வருமானம்
இல்லாத வாழ்க்கையில் அவர்கள் பழைய பிளாஸ்டிக் காகிதம் கொண்டு அல்லது பொருள்களை
வைத்து ஒரு சிறிய குடில் அமைத்து பாலங்களுக்கு கீழே சிறிதும் சுத்தமில்லாத தெருக்களின்
மூலையில் தங்கள் உடலை மறைத்து கொண்டு வாழ்கையை நடத்துவர்.
எத்தனை முறை இவர்களை கணக்கெடுத்து பெரிய அலுவலகங்கள் கொடுக்கும் பணம் கொண்டு
மறுவாழ்வு இல்லங்கள் அமைத்தாலும் முன் கூறிய படி தங்கள் சுதந்திரத்தை காரணம் காட்டி தங்கள்
வாழ்க்கையை அவர்கள் இஷ்டப்படி வாழ்கின்றனர்.
நியூயார்க் நகரில் கிறிஸ்டி என்னும் பெயருள்ள ஒருவன் இதுபோல் இருந்தான் . அவன் இருப்பதும்
தூங்குவதும் ஒரு பார்க் பெஞ்சுகளில் தான். சில சிறிய திருட்டுகள் நடத்த இடத்தில் யாரும்
பிடிபடாவிட்டால் கிறிஸ்டியைப் போலீஸ் குற்றவாளியாக்குவதுண்டு அதற்கு அவன் எதிர்ப்பு
தெரிவிக்காமல் உடனே தண்டனை அனுபவிக்கச் சென்று விடுவான். அமெரிக்காவில்
குளிர்காலத்தின் பொழுது வேண்டுமென்றே சின்ன திருட்டுக்கள் செய்து மாட்டிக்கொண்டு
ப்ளாக்வெல் (Blackwell) தீவில் கதகதப்பான சூழலில் இரண்டு அல்லது மூன்று மாதங்கள்
சிறைத்தண்டனை அனுபவிப்பது அவன் வழக்கம்.

இந்த வருட குளிர்காலத்தில் சிறைக்குப் போக வேண்டுமென்று முடிவுசெய்து வித்தியாசமாக ஏதேனும்
செய்யலாம் என்று யோசித்தான் .
ஒரு ஆடம்பரமான ஹோட்டலில் சாப்பிட்டு பணம் கொடுக்காமல் மாட்டிக்கொள்ளலாம் என்று
நினைத்தான் அவன் முயற்சி பலிக்கவில்லை. வாசலில் நின்ற காவல்காரன் அவன் கிழிந்த ஆடையின்
தோற்றத்தை கண்டு அந்த பெரிய ஹோட்டலில் நுழையவே அனுமதிக்கவில்லை.
பின்னர் ஒரு கடை மீது கல் எறிந்து கண்ணாடியை உடைத்துவிட்டு அங்கு வந்த போலீஸிடம் தானே
சென்று நான் தான் அந்த கண்ணாடியை உடைத்தேன் . என்னை கைது செய்யுங்கள் என்றான்.
அவர்கள் அவனை நம்பாமல் அவனுக்கு புத்தி சரில்லையோ என சந்தேகப்பட்டு அவனை புறம் தள்ளி
விட்டு, வீதியில் பஸ்ஸைப் பிடிக்க ஓடுபவனைத் துரத்தி கொண்டு செல்ல ஆரம்பித்தனர்.இந்த
முயற்சியும் கிறிஸ்டிக்கு நினைத்த பலன் தரவில்லை.
மீண்டும் கைதியாவதற்கு முயற்சி மேற்கொண்டு ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு தன்னிடம்
பணம் இல்லை என்று சொல்லி அவர்களிடம் போலீசை அழைக்க முடியுமா என்ற பொழுது அங்கு
இருந்த ஒருவர் அவனுடைய உடையையும் நிலையையும் கண்டு பரிதாபப் பட்டு பணம் கொடுக்க
அவர்கள் போலீசிடம் புகார் அளிக்காமல் அவனை விட்டுவிடுகிறார்கள்.
பின்னர் வெளியே வந்ததும் அங்கு நின்ற ஒருவரிடம் கையில் உள்ள ஒரு மழை கோட்டையும்
குடையையும் எடுத்துக் கொண்டு அவன் ஓட அவர் பின்னால் அவனை துரத்திப் பிடிக்க அவன்
அவரிடம் போலீஸைக் கூப்பிடச்சொன்னபோது மறுத்து .இந்த இரண்டும் என்னுடையது அல்ல
நான் இதை தற்செயலாக கண்டு எடுத்து வந்தேன் உங்களுடையாதா இருந்தால் நீங்களே வைத்துக்
கொள்ளுங்கள் என்று சொல்லிவிடுகிறார். அவனது எந்த முயற்சியும் பலன் அளிக்காததால் அங்கே
நின்று வழியில் போவோர் வருவோரையெல்லாம் (போலீஸ் உட்பட) மிக மோசமாகப் பேசி கிண்டல்
செய்கிறான்.
எதுவுமே பலனின்றி ஆயாசமாக குளிரில் நடுங்கியபடி நிற்கும்போது அருகிருந்த சர்ச்சில் பாடப்பட்ட
பாடல் காதில் விழுகிறது. அதைக் கேட்டவுடன் அவ்னுக்கு தன் தாய் நினைவுக்கு வருகிறாள்.
அவளோடு சர்ச்சில் அந்தப் பாடலைப் பாடியது, தன் தாய் தன் மீது வைத்திருந்த அன்பு, தன்னைப்
பற்றி அவள் கட்டிய மனக்கோட்டைகள், அவள் உயிரோடு இருக்கும்போது அவளுடன் வாழ்ந்த அன்பு
நிறைந்த வாழ்க்கை, அவன் நண்பர்கள் என்று எல்லோரும் நினைவுக்கு வர, இனியாவது இந்தக்
கேவலமான வாழ்க்கையை விட்டு திருந்தி வாழ்வது என்று முடிவு செய்யும்போது, போலீஸ் அவனிடம்
வந்து எங்கோ நடந்த திருட்டில் அவனை அந்த இடத்தில பார்த்ததாக யாரோ கூறியதை வைத்து
சந்தேகத்தின் பேரில் கைது செய்ய அவன் நினைத்தது போல அந்த சிறைக்கே மூன்று மாத
தண்டனை பெற்று செல்கிறான்.
நல்லவைகளோ தீயவைகளோ நாம் நினைத்த பொழுது கிடைப்பதில்லை நேரம் வரும் பொழுது
அதுவே தானாக வந்து நம்மை வாயடைக்க வைக்கிறது.
இனி குளிர்காலத்தை பற்றி கவலை இல்லை என கிறிஸ்டி நினைத்து கொண்டு மகிழ்வோடு
கதகதப்புள்ள சிறைக்கு சென்றான். அவன் மனதில் இனி சாப்பாட்டிற்கோ, படுப்பதற்கோ எங்கும்
செல்ல வேண்டாம் என்ற ஒரு இனிமையே மனதை நிறைத்தது.
அவன் சிறையில் சென்று அடைத்தபொழுது யாரோ ஒருவரின் குழந்தை அங்கு தங்கள் பள்ளியில்
படித்த பாடம் ஒன்றை கூறியதை தன் செவி கொடுத்து கேட்டான்
life is full of ups and downs what you ask for never happens

what happens on its own is always good for you
it is gods will for he knows what is good for you
when you are at the edge of the hill he will either carry you or
he will teach you how to fly from the hill and save you

எழுதியவர் : கே என் ராம் (22-Jun-24, 11:19 am)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 35

மேலே