என்னடா தம்பி புலம்பிட்டு இருக்கிற

நான் போன வருசமே முடிவு பண்ணி வச்ச பேரை எதிர் வீட்டுக்காரன்

எப்படியோ தெரிஞ்சுகிட்டு அவனோட பெண் குழந்தைக்கு அந்தப்

பேரை வச்சுட்டான். இப்ப நான் என்ன செய்வேன். எதிரும் புதிரும்

உள்ள வீடுகளில் உள்ள இரண்டு குழந்தைகளுக்கு ஒரே பேரா

இருந்தால் பலவிதக் குழப்பங்கள் வருமே! அவுங்க பொண்ணத்

திட்டற சாக்கில நம்ம பொண்ணக் கரிச்சுக் கொட்டுவாங்க. சாடை

மாடையாப் பேசுவாங்க. இப்ப என்ன செய்யற்றது?


@@@@@@@@@@@

என்னடா தம்பி பொலம்பிட்டு இருக்கிற?

@@@@@@@@

அண்ணே என் மனைவிக்குப் பெண் குழந்தை பிறந்தா 'கீர்த்தி'னு

பேரு வைக்கலாம்னு போன வருசமே முடிவு பண்ணி

வச்சிருந்தேன். பொறாமையும் பேராசையும் பிடிச்ச நம்ம

எதிர்வீட்டுக்காரன் என்ன முடிவை எப்படியோ தெரிஞ்சுகிட்டு

மொதல்ல பொறந்த அவன் பொண்ணுக்கு 'கீர்த்தி'ங்கிற பேரை

வச்சு என் முகத்தில கரியைப் பூசிட்டானே. போன வாரம் பொறந்த

என் பெண் குழந்தைக்கு இப்ப எந்தப் பேரை வைக்கிறதுன்னு

தடுமாறிட்டு இருக்கிறேன்.

@@@@@@

போடா தம்பி. கீர்த்தி என்னடா கீர்த்தி. நீ உன் பொண்ணுக்கு

'கிரித்தி'னு பேரு வைடா. எதிர்வீட்டுக்காரன் வயிறு எரிஞ்சுட்டு

கெடக்கட்டும்.

@@@@@@@@@@@


சரி அண்ணே. நீங்க சொல்லறதுதான் சரியான முடிவு. என்

பொண்ணுக்கு 'கிரித்தி'னு பேரு வச்சு எதிர்வீட்டுக்காரன் முகத்தில்

கரியைப் பூசினால் தான் என் கோபம் தீரும்.

@@@@@@@@@@@@@@@

Kirti = Fame.
Kriti = Work of Art, Creation, Action

எழுதியவர் : மலர் (21-Jul-24, 10:25 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 68

மேலே