தேசிய நூலக தினக் கவிதை

📚📚📚📚📚📚📚📚📚📚📚

*தேசிய நூலக தினம் இன்று*


*நூலகம் ஓர் உலகம்*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

📚📚📚📚📚📚📚📚📚📚📚

நூலகம்
சிலையில்லாத கோயில்...
வேர் இல்லாத
விருட்சம்......

வயிற்றுப் பசிக்கு
புனித பாலூட்டும்
அன்னையைப் போல்
மூளைப்பசிக்கு
புத்தகப் பாலூட்டும் தந்தை....

இங்கு வருவதற்கு
எடுத்து வைக்கும்
ஒவ்வொரு அடியும்
புகழின் உச்சியை
அடைவதற்கு
எடுத்து வைக்கும் அடியே...!

ஆளாக வளர
அன்னையின்
கருவறையை விட்டு
வெளியே வர வேண்டும்
அறிவாளியாக வாழ
நூலகத்தின்
கருவறைக்குள்
போக வேண்டும்...

தன்னை தேடி வருபவர்களை
ஒருநாள் உலகமே!
தேடும்படி செய்யும் ஆசிரியர் ....

பொழுதுபோக்கும்
பூஞ்சோலை....
பழுது பார்க்கும்
பட்டறை சாலை.....

படிப்பாற்றலை மட்டுமல்ல
படைப்பாற்றலையும்
பிரசவிக்கும் கருவறை.....

பெயர் பலகை
வைக்கப்படாத
இன்னொரு பல்கலைக்கழகம்.....

அன்று
வசந்தகாலமாய் வாழ்ந்தது...
இன்று
இலையுதிர் காலமாய்
இருக்கின்றது....

செல்போன் கரையான்கள்
நூலகங்களை
அரித்துக் கொண்டுள்ளது....
தொலைக்காட்சி
நெரிசல்களுக்கு இடையில்
நூலகம்
தொலைந்து கொண்டுள்ளது....

அன்று
'புத்தகங்கள்
அழுக்காக' இருந்தது
'மனித மனங்கள்'
சுத்தமாக இருந்தது
இன்று
'புத்தகங்கள்
சுத்தமாக' இருக்கிறது
'மனித மனங்கள்
அழுக்காக' இருக்கிறது.....

'புத்தகங்கள்
கிழியாமல்' இருக்கிறது
'மனித வாழ்க்கை'
கிழிந்து போய் கிடக்கின்றது....

முருகனைப் போல்
"ஞானம் பழம்" பெற
மயில்வாகனம் இல்லை என்று
வருத்தப்படாதீர்கள்......
விநாயகரை போல்
"நூலகத் தாய்தந்தையை "
சுற்றி வந்தாலே !
ஞானத்தையே ! பெற்று விடலாம்
மறந்து விடாதீர்கள்....!!!

அனைவருக்கும்
தேசிய நூலக தின
நல்வாழ்த்துக்கள் .....

*கவிதை ரசிகன்*

📚📚📚📚📚📚📚📚📚📚📚

எழுதியவர் : கவிதை ரசிகன் (12-Aug-24, 8:31 pm)
பார்வை : 25

சிறந்த கவிதைகள்

மேலே