கண்சிமிட்டும் வண்ணப் பூ

தென்றல் விளையாடும் தேன்மலர்த் தோட்டத்தில்
அன்றலர்ந்த நீலப்பூ ஆயிரம் உன்னிரு
கண்ணிலுருண் டோடும் கவின்நீலத் தில்மகிழ்ந்து
கண்சிமிட் டும்வண்ணப் பூ

எழுதியவர் : கவின் சாரலன் (13-Aug-24, 9:37 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 55

மேலே