இதழ்குவி குறள் வெண்பா

*****************************
பூச்சூடும் பூவுக்குப் பூத்தூவும் பூந்தோப்பு
மூச்சோடு மூச்சூதும் மொட்டு
*
மினுக்கும் மினுமினுப்பும் மேலோடு கூடும்
குலுக்கும் குமருக்குக் கூத்து
*
நூலொக்கும் முத்து நுசுப்பெனும் நூலொடு
மேலொழுகு மின்ப மிடுக்கு
*
உடுத்தும் உடுப்புக்கும் ஊனுக்கும் பூவைத்
தொடுத்துருகு வோர்க்குண்டு துன்பு
*
குடுகுடுத்துக் கொண்டோடும் கூற்றுவன் கூட்டுள்
படுத்துகொளும் பக்குவம் பற்று
*
கூட்டுக்குக் கூப்பிடும் கூற்றுவன் கூட்டுக்கு
கூடொடோடும் வாழ்வொரு கூற்று
*
ஒத்தோடும் ஊரோடு ஒப்புக்கு ஒத்தோடும்
உன்னோடும் ஊரோடும் ஓடு
*
ஒத்தூது மூரோடு ஒத்தூது வாரோடு
வித்துமூதும் வேரோடு வேறு
*
துணுக்குற்றுத் தூத்தூன்னு துப்புமூ ருன்முன்
முணுமுணுக்கு முன்போட்டு மூச்சு
*
உடும்புக் குடும்பு உருவாகும் வம்பு
வடுவேற்று வாடும் வகுப்பு
*

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (21-Aug-24, 3:41 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 48

மேலே