எட்டாக் கனிக்கு கொட்டாவி விடாதே

மூவேலையும் குடியே கதியென்று இருக்கும்
மூவேந்தர் வழி தோன்றல் என்று உரைக்கும்
மூளை முழுதும் போதைக்கு அடிமையான
முட்டாள் தகப்பனின் மூத்த மகள் நான்!

மூச்சிரைக்க முழு குடும்பப்பாரம் நான் இழுக்க
முப்பத்தாறு வயதுக்கு பின்னும் முதிர்கன்னியாய் வாழ்கிறேன்
மூன்றாம் தாரம் கேட்போரையும் மணமுடிக்க வழியில்லை
முன்புசெய்த பாவமோ? திருமண பந்தம் என்னும்
எட்டாக் கனிக்கு கொட்டாவி விடுகின்றேன்!

எழுதியவர் : நா. தியாகராஜன் ஈஞ்சம்பாக்கம், சென்னை (28-Aug-24, 4:38 pm)
சேர்த்தது : TPRakshitha
பார்வை : 65

மேலே