இமைக் குற்றம் கண்ணுக்கு தெரியாது
தன்பிள்ளை தென்னம்பிள்ளை
தவறேதும் செய்ய வாய்ப்பில்லை!
ஊரார் பிள்ளை உதவாக்கரைபிள்ளை
ஊனக்கண்ணால் யாவும் தொல்லை!!
உறங்கும் மனதை உசுப்பிக்கேட்காதவரை
உண்மை என்றும் சபை ஏறுவதில்லை!
புரையோடி போன கண்களால்
இமைக் குற்றம் கண்ணுக்கு தெரிவதுமில்லை!!