அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு

சிலிக்கான் வேகம்கொண்ட
செயற்கை நுண்ணறிவால்
செயல்திறன் மங்கிப்போனது மனிதமூளை!

மரபணு மாற்றப்பட்ட விதைகள்
மண்ணில் புதைக்கப்பட்டதால்
மண்டியிட்டு செத்தது இயற்கை விவசாயம்!

நகரங்கள் கக்கும் நச்சுப்புகையால்
நசுங்கி போனது நல்வயல் கிராமம்!

தொழிற்சாலைகளின் ரசாயனகழிவால்
தொலைந்து போனது
தொன்மைகொண்ட ஆறும் குளமும்!

ஆகாயம் தொடும்
அசுர வளர்ச்சி
அமுதே என்றாலும்
அளவுக்கு மிஞ்சினால் நஞ்சிதானே

எழுதியவர் : நா. தியாகராஜன் ஈஞ்சம்பாக்கம், சென்னை (31-Aug-24, 6:09 pm)
சேர்த்தது : TPRakshitha
பார்வை : 31

சிறந்த கவிதைகள்

மேலே