தேவதை தரிசனம்

💃💃💃💃💃💃💃💃💃💃💃

*உன்னில் தான்*
*பார்க்கிறேன்...*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

💃💃💃💃💃💃💃💃💃💃💃

கவிபாடும் பெண்களை
பார்த்திருக்கிறேன்
கவிபாடும் கண்களை
உன்னில் தான் பார்க்கிறேன்....

அழகான சிலையை
பார்த்திருக்கிறேன்.....
பார்ப்பவர்கள் எல்லாம்
சிலையாகும் அழகை
உன்னில்தான் பார்க்கிறேன்.... !

பார்த்தால் கவிதை வரும்
பெண்களைப் பார்த்திருக்கிறேன்
கவிதையே !
பெண்ணாகி வருவதை
உன்னில் தான் பார்க்கிறேன்...!

கற்பனையாக வரைந்த
பெண் ஓவியத்தை
ரசித்திருக்கிறேன்.....
ஆனால்
நிஜமான ஓவியத்தை
உன்னில் தான் ரசிக்கிறேன்....!

கண்களை கூசும்
பளபளப்பான
கண்ணாடி ஒளியைப்
பார்த்து இருக்கிறேன்....
அந்தக் கண்ணாடிக்கே!
கண்கள் கூசும்
பளபளப்பை
உன்னில்தான் பார்க்கிறேன்....

பூக்களைப் பறிக்கும்
பெண்களைப் பார்த்திருக்கிறேன்..
மனங்களைப் பறிக்கும்
பெண்ணை
உன்னில் தான் பார்க்கிறேன்......

ஆண்களுக்குப் பிடிக்கும்
பெண்களை கண்டிருக்கிறேன்
பெண்களுக்கே பிடிக்கும்
பெண்ணை
இன்று தான் காண்கிறேன்.....!!!

அழகான ஆடை அணியும்
பெண்களை
சந்தித்து இருக்கிறேன்..
அணிந்தால்
ஆடையே ! அழகாகும்
உன்னை
இன்றுதான் சந்திக்கிறேன்....!!!

*கவிதை ரசிகன்*

💃💃💃💃💃💃💃💃💃💃💃

எழுதியவர் : கவிதை ரசிகன் குமரேசன் (3-Sep-24, 8:37 pm)
பார்வை : 131

மேலே