என் அறம் எதுவெனில்

அன்புடைமை, அருள் உடைமை என்றே
ஆழ்ந்த அறங்கள் ஆயிரம் வகுத்தார்!

செந்நாப்போதானார் செப்பியதில் ஒன்று
சேர்ந்ததுஎன்னில் புலால் மறுத்தல்!

உயிரெடுக்கும் உரிமை உனக்கு யார்தந்தார்
உறுத்தியது உள்ளம் எந்தன் பதின்வயதில்

கொன்றால் பாவம் தின்றால் போகுமென்றார்
தின்றதில் திகட்டி நின்றது நெஞ்சில்!

உள்ளம் ஏற்காத உண்டியை எந்நாளும்
உடலது ஏற்காது உண்மையை உணர்த்தேன்!

இல்லாளும், ஈன்ற பிள்ளையும்
இன்னமும் உண்ண
இசைந்தேன் நானும்,
இல்லறம் என்பதும் நல்லறம்தானே!

எழுதியவர் : நா. தியாகராஜன் ஈஞ்சம்பாக்கம், சென்னை (4-Sep-24, 10:03 am)
சேர்த்தது : TPRakshitha
பார்வை : 38

மேலே