எங்களின் அப்பா

எங்களின் அப்பா.

எங்களின் அப்பா
தங்கத்தின் தங்கம்
கர்ஜிக்கும் சிங்கம்
எங்கள் வாழ்வின்
அசைக்க முடியா
ஓர் அங்கம்.

அவர் தோள்
ஏறித்தான் நாங்கள்
வானம் தொட்டோம்.
அவரின் வியர்வைத்
துளிகள்தான் எங்களின்
பன்னீர் துளிகளானது.

அவரது மனஉறுதிதான்
எங்கள் உயிர்
குருதியானது.
அவரது வெடித்த
பாதங்கள் எங்களது
மலர் பாதையானது.

அவரது அனுபவம்
எங்களின் அறிவுக்கு
கலங்கரை விளக்கமானது.
அவரின் அறியாமை
எங்களுக்கு எச்சரிக்கை
மணியானது.

அவரின் எளிமை
எங்களின் அரிச்சுவடியானது.
அவரின் கோபமோ
அடி வயிற்றின் நெருப்பானது.

அவரின் பாசமோ
பலாப்பழச் சுவையானது.
எங்களின் அப்பா
எங்களின் கெத்தானாரே
எங்கள் வாழ்வின்
சொத்தானாரே....!

[இலங்கை 'கரிசல் கலை இலக்கிய மன்றம்' நடத்திய
கவிதை போட்டியில் பங்கு பெற்ற கவிதை ]

எழுதியவர் : ஜீவன் ( மகேந்திரன் ) (3-Sep-24, 8:31 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : yengalin appa
பார்வை : 488

மேலே