புத்தகம் போல்நடந்தாள் புன்னகையில்
எத்தனை பூக்கடைகள் எத்தனை பூவகைகள்
அத்தனையும் அன்பில் அவளை வரவேற்க
சித்திரப் பூவிழியாள் செந்தமிழ்த் தேனிதழாள்
புத்தகம் போல்நடந்தாள் பூ
----ஒரு விகற்ப இன்னிசை வெண்பா
எத்தனை பூக்கடைகள் எத்தனை பூவகைகள்
அத்தனையும் அன்பில் அவளை வரவேற்க
சித்திரப் பூவிழியாள் செந்தமிழ்த் தேனிதழாள்
புத்தகம் போல்நடந்தாள் புன்னகையில் பார்க்குது
மொத்தச்சந் தைக்கூட்ட மும்
--ஒரு விகற்ப பஃறொடை வெண்பா