இன்று இவர் இருந்தால் என்ன பதில் சொல்வார்

கேள்வி: உங்களை இன்றும் தேசத்தந்தை என்றுதான் பொதுமக்கள் சொல்கிறார்கள். இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
காந்திஜி: என்னை தேசத்துரோகி என்று சொல்லாதவரைக்கும் நல்லது.
***
கேள்வி: நீங்கள் இறந்தீர்கள். உங்கள் மகள் கொல்லப்பட்டாள். உங்கள் பேரன் கொல்லப்பட்டான். உங்கள் கொள்ளு பேரன் வார்த்தைகளால் கொன்றுகொண்டிருக்கிறான். நீங்க என்ன கொல்றீங்க, மன்னிக்கவும், சொல்றீங்க?
நேரு: இந்த மாதிரி கேள்வியெல்லாம் கேட்டு என்னைக் கொல்லாதீங்க.
***
கேள்வி: இந்தியாவின் ஒருமைக்கும் ஒற்றுமைக்கும் நீங்கள் அவ்வளவு பாடு பட்டீர்கள். ஆனால் சுதந்திரத்திற்கு பின், உரிய பதவியும் கவுரவமும் உங்களுக்கு கொடுக்கப்படவில்லை. இப்போது பார்த்தால் குஜராத்தில் உங்களுக்கு 182 மீட்டர் உயரமுள்ள முழு உருவச்சிலை வைக்கப்பட்டுள்ளது. உங்கள் கமெண்ட் என்ன?
படேல்: அப்போதே உயர்ந்த மனிதனான என்னை, இப்போதுதான் இவ்வளவு தூக்கிவிட்டிருக்கிறார்கள். இந்தியா முழுவதும் கண்ணுக்குத் தெரியவில்லை என்றாலும், குஜராத் மாநிலம் முழுவதும் என் கண்களுக்கு இப்போது ஓரளவுக்குத் தெரிகிறது. என்ன ஒரு வருத்தம் என்றால், என் தலைக்கு மேலே ஒரு குடை கூட வைக்கவில்லை. வெயில் மழை அதிகமாக இருக்கையில் எனக்கு பிரச்சினையாக இருக்கிறது.
***
கேள்வி: நீங்க வானுலகம் போய்ட்டீங்க. ஜெ அம்மா வைகுண்டம் போய் விட்டார்கள். இப்போது உங்கள் கட்சி எதுவென்றே தெரியாமல் அல்லாடிக்கொண்டிருக்கிறது.
எம்ஜியார்: அரசியல் மட்டும் இல்லை, சினிமாவும் ரொம்ப மோசமாகிவிட்டது. விஷயம் தெரியாதவர்கள் மக்களை ஆளுகின்றனர். ஒன்றுமே தெரியாதவர்கள் எல்லாம் நடிகர்களாக மக்களை அடிமை படுத்துகின்றனர். எல்லாம் பட்ட (குண்டடியும் சேர்த்துதான்) எனக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்தால், இவர்கள் எல்லோரையும் ஒரு கிழி கிழித்துவிடுவேன். அண்ணா நாமம் வாழ்க.
***
கேள்வி: நாற்பதாயிரம் பாடல்களுக்கு மேல் பாடிவிட்டு மேலே போய் விட்டீர்கள். உங்கள் சாதனையை முறியடிப்பது அவ்வளவு சுலபம் இல்லை.
எஸ்பிபி: நானும் முதலில் அப்படித்தான் நெனச்சேன். ஆனால், யேசுதாஸ் 84 வயசிலிலும் இன்னும் பாடிக்கொண்டிருக்கிறார். இது தொடர்ந்தால், அவர் 90 வயசில என் சாதனையை ஒடச்சிடுவார். அப்புறம் நான் விரலை வாயில் போட்டுகொண்டு வேடிக்கை பார்க்கவேண்டியது தான்.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (17-Sep-24, 11:40 am)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 52

சிறந்த நகைச்சுவைகள்

மேலே