பாரம்பரியத்தை மறக்கக் கூடாது
முதல் மகப்பேறிலேயே நம்ம பொம்மிக்கு (இ)ரட்டைக் கொழந்தை.
ஆணும் பொண்ணும் பொறந்திருக்குது. நம்ம பாரம்பரியப்
பேருங்களைத்தான் வக்கொணும்.
@@@@@
திம்மையா அண்ணன் தான் நம்ம மலை கிராமத்தில பொறக்கிற
குழந்தைகளுக்குப் பேரு வைக்கிறது வழக்கம். அவரையே
கொழந்தைகளுக்குப் பேரு வைக்கச் சொல்லுவோம். வாங்க
பக்கத்து வீட்டில தானே அவரு இருக்கிறாரு. அவருகிட்டக்
கேப்போம்.
@@@@@@
(பக்கத்து வீட்டில்): என்ன புள்ளகளா பொம்மி கொழந்தைகளுக்குப்
பேரு வைக்கச் சொல்லிக் கேக்கத்தானே வந்திருக்கிறீங்க.
(இ)ரட்டைக் கொழந்தைகள். ஆண் ஒன்னு. பொண்ணு ஒன்னு.
ஆண் கொழந்தைக்குத் 'தம்மண்ணா'னு பேரு வையுங்க.
பொண்ணுக்கு 'தம்மக்கா'னு பேரு வையுங்க. இந்தப் பேருங்க
கொழந்தைகளோட கொள்ளுத் தாத்தா அவரோட அக்கா பேருங்க.
நம்ம பாரம்பரியத்தை எப்பவும் விட்டுக் கொடுக்க முடியாது.
@@@@@@@@@
(எல்லோரும்): ஆமாம்.ஆமாம். தம்மண்ணா, தம்மக்கா.
அருமையான பேருங்க.