நட்பிற்கு ஓர் எச்சரிக்கை -
ஒரு முறை பள்ளத்தில் விழுந்தேன்
கரம் கொடுத்து தூக்கினான்
ஒரு நண்பன்
மீண்டும் ஒரு முறை விழுந்தேன்
இந்த முறை வேறொரு நண்பன்
அவனுக்கு முன்பாய்
பல முறை விழுந்தேன்
பல நண்பர்கள்
துன்பம் வரும் வேளையில் உண்மை நண்பர்கள்
பிறக்கிறார்கள்
அல்லது
நம் துன்பம் நமக்கு முன்பாக நண்பனுக்கு
தெரிகிறது
ஆனால் இப்படியும் உண்டு
நண்பன் வரும் வேளையில் துன்பம் வரலாம்
நல்ல நட்பாய் இருந்து
நண்பன் நல்லவனாய் இல்லாவிட்டால்