ஒளி தீபம் ஏற்றுவோம்...

அன்பர்களே...

இன்பம் எனும்
நல்ல ஒளி தீபம்
ஏற்றி...

துன்பம் எனும்
நரக அசுரனை
அகற்றி...

இயன்றால்...

இல்லாதார்
இன்முகம் மலர...

முப்பொழுதில்லாவிடினும்
ஒரு பொழுதாவது
உண்ண ஈந்து...

அவர்களின்...

அகம் மகிழும்
ஆண்டவனை காண்போம்
இந்நன்னாளில்...

எழுதியவர் : இவன் (20-Oct-11, 12:58 pm)
சேர்த்தது : சகா சலீம் கான்
பார்வை : 594

மேலே