முத்தர்
அப்பா அண்ண்னுக்கு நீங்க வச்ச பேரு என்ன?
@@@@@@@@@@@
'தங்கம்'னு பேரு வச்சோம்.
@@@@@@@@
இப்ப அண்ணன் பேரை பள்ளிலே மாத்தினீங்களாமே!
@@@@@@@@@@@@@
ஆமாம்
@@@@@@@@@
அந்தப் பேரைச் சொல்லுங்க.
@@@@@@@@@
'தங்கர்'
@@@@@
எதுக்குத் 'தங்கர்'னு பேரை மாத்தினீங்க?
@@@@@@@@@@@@@
பேருல மரியாதைக்கு அழகு பேருகூட 'ர்' சேர்க்கணும்னு
அடம்பிடிச்சான் தங்கம். அதனால் அவன் விருப்படி 'தங்கர்'னு
அவன் பேரை மாத்துனோம்.
@@@@@@@@@@@@@
எனக்கும் பேருல மரியாதை தேவை. 'முத்து'ங்கிற என் பேரை
'முத்தர்'னு மாத்துங்க. அப்பத்தான் நான் பள்ளிக்குப் போவேன்.
@@@@@@@@@@@@
சரிடா முத்தர். நம்ம வழக்குரைஞர் மாமாகிட்டச் சொல்லி உன்
பேரை 'முத்தர்'னு மாத்தச் சொல்லறேன். முத்தர் அழகான
இந்திப் பேரு மாதிரியே இருக்குதடா முத்தர்.