ஓரு கவிஞனின் வாக்குமூலம்
நான்
பிச்சைப் பாத்திரமாக இருந்தேன் கவிதையே
உன்னால் தான் நான்
அட்சயப்பாத்திரமாக
மாறினேன்...
இந்த மண்ணைவிட்டு
நான் பிரிந்தப்பின்பும்
அச்சிட்ட என் புத்தகங்கள் சுவாசித்துகொண்டிருக்கும்...
என் தலையெழுத்து
முட்பாதையில் பயணிக்கலாம் ஆனால்
என் வலையெழுத்து
சிவப்புகம்பள விரிப்பில் நடந்து சிம்மாசனம் அமர்ந்திருக்கிறது...
என் தமிழ்த்தாய் என்றும் சாகா
வரம் பெற்றவள்
ஆதலால் அவளின்
ஆசிப்பெற்ற
என் எழுத்துக்களும்
சாகா வரம் பெற்றுள்ளது...
ஒரு அபலையின்
கண்ணீர்த் துளிகளை
உறிஞ்சிக் கொள்கிறது என் கவிதைத்தாள்...
நான் யாருக்கும் எதற்கும் பயம் கொள்வதில்லை என்னிடம் எப்போதும்
என் சட்டைப்பையில்
முனை மழுங்காத ஆயுதம் உள்ளது...
என் முதல் கவிதைப் புத்தகத்தை நான் கையில் வாங்கும்போது
இவ்வுலகத்தையே கையில் வாங்கிய உணர்வு எனக்குள் தோன்றியது...
பல்வேறு பதிப்பக முகவரி
தேடி அலைந்தேன்
இப்போது என் முகவரி
தேடி அலைகிறது
எழுத்துலகம்...
புத்தகமே உன் கண்களால்தான்
நான் முதன் முதலாக
என்னைப் பார்த்தேன்
மகிழ்ந்தேன்.
*✍ செல்வமுத்து மன்னார்ராஜ்*
.